திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள வாரச்சந்தை பகுதியில் பகல், இரவு என பாராமல் அப்பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் அங்கு அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் அவ்வழியாக செல்ல மிகவும் அச்சம் அடைகின்றனர். மேலும் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை அங்கேயே போட்டு செல்வதால் கண்ணாடி துகள்கள் பொதுமக்கள் கால்களை பதம் பார்க்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.