திருச்சி குண்டூர் வள்ளலாகண்ட அய்யனார் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் உள்ள ஏரியின் படிக்கட்டு பகுதியில் குப்பைகள் சேர்ந்து மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.