குழித்துறை மேற்கு ரெயில் நிலையத்தில் புனலூர்-மதுரை, மதுரை-புனலூர், புனலூர்-கன்னியாகுமரி, நாகர்கோவில்- கோட்டயம் ஆகிய ரெயில்கள் பயணிகளின் வசதிக்காக நின்று சென்றன. கடந்த 5 ஆண்டுகளாக இந்த ரெயில்கள் குழித்துறை மேற்கு நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி மேற்குறிப்பிட்ட ரெயில்களை குழித்துறை மேற்கு நிலையத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜப்பன், மருதங்கோடு.