நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2025-09-21 17:16 GMT

வேடசந்தூர் அருகே வே.புதுக்கோட்டை ஊராட்சி மினுக்கம்பட்டியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படாததால் குளம்போல் தெருவில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்