சிதம்பரம் ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றிலும் ரெயில் பயணிகளுக்கு இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் பயணிகளை முட்ட விரட்டுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.