தெருநாய்கள் தொல்லை

Update: 2025-09-21 15:50 GMT
பரங்கிப்பேட்டை ஹக்கா சாஹிப் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வெளியே சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்