மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2025-09-21 15:49 GMT
எம்.புதூர் அடுத்த குறிஞ்சிநகர் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் சாலையிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். அதுமட்டுமின்றி குடித்துவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டும் செல்கின்றனர். மேலும் சாலையில் செல்பவர்களிடம் வீ்ண் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்