காட்சிப்பொருளான சுகாதார மைய கட்டிடம்

Update: 2025-09-21 15:46 GMT
சங்கராபுரம் அடுத்த லக்கிநாயக்கன்பட்டி வடக்கு தெருவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் தற்போது சுகாதார மைய கட்டிடம் பராமரிப்பின்றி புதர்மண்டி விஷப்பூச்சிகளின் புகலிடமாக உள்ளது. எனவே காட்சிப்பொருளாக உள்ள சுகாதார மைய கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்