மதுரை திருப்பாலை ஆதிபராசக்தி தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளன. இந்த தெருநாய்கள் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் கடிக்க துரத்துகிறது. மேலும் நாய்கள் ஒன்றுக்குஒன்று சண்டை போட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?