விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் இருக்கும் கோணப்பணேந்தல், சித்தலகுண்டு உள்பட பல்வேறு கிராம விலக்குகளில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?