விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ரெயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இந்த தெருநாய்கள் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?