பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வேப்பூரில் உள்ள ஏரி அருகே சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதுடன், இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து சட்ட விரோத விற்பனையை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.