பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் வேலை நிமித்தமாகவும், மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லவும் பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அகரம்சீகூரில் முறையான பஸ் நிலையம் இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அகரம்சீகூரில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.