சேதமடைந்த சுடுகாடு கொட்டகை

Update: 2025-09-21 10:18 GMT

வலங்கைமான் ஆலங்குடி ஆதி திராவிடர்களுக்கான சுடுகாடு கொட்டகை உள்ளது. இந்த கொட்டகை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. மேற்கூரை, தூண்களில் சிமெண்டுகாரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இதனால் சுடுகாடு கொட்டகையை அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த சுடுகாடு கொட்டகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்