மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா ஆட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியினர் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட இடத்தில் சேதமடைந்து காணப்படும் நீர்த்தேக்க தொட்டியை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்..