புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பெருமநாடு, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து பெருமநாடு, குடுமியான்மலை வழியாக புதுக்கோட்டைக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், இப்பகுதி பொதுமக்கள் வேலை நிமித்தமாக புதுக்கோட்டைக்கு சென்று வர மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவ - மாணவிகளும் தாமதமாக பள்ளி, கல்லூரி சென்று வரும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.