புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ்களும், பழைய இடத்திலிருந்து நகர பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. நகர பஸ்கள் இயக்கப்படும் இடத்தில் முறையான பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் கொட்டும் மழையில் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.