கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுங்சாலையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் சுசீந்திரம் குளம் உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாமல் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், நெடுஞ்சாலையில் உள்ள குப்பைகளை குளத்தில் போடுகின்றனர். இதனால் குளத்து தண்ணீர் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாருவது மட்டுமல்லாது குப்பைகளை குளத்தில் கொட்டுவதை தடுக்க அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், அந்த நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், தென்தாமரைகுளம்.