மேல்புறம் அருகே மாவறத்தல் விளை பகுதியில் காட்டுக்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், பாசன தேவைக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மண் தூர்வரும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அந்த பணிகள் பதியில் நிறுத்தப்பட்டது. இதனால், குளத்து தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜென்சிமோள்,மாவறத்தல விளை.