கடலூர் முதுநகர் அடுத்த பச்சாங்குப்பத்தில் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. அதன் மேற்பகுதி முழுவதும் ஆகாயத்தாமரைகளால் மூடப்பட்டிருப்பதால் வாகனஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட இறங்கும் போது விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே விபத்துகள் ஏதும் நிகழும் முன் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.