வாகன ஓட்டிகள் அச்சம்

Update: 2025-09-07 15:47 GMT

மதுரை பழங்காநத்தத்தை அடுத்த வசந்தநகர்-காளவாசல் இடையே அமைந்துள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகள் சேதமடைந்து முறிந்த நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் கம்பிகள் இன்றி அபாயமாக உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு கம்பிகளை முழுமையாக அகற்றி புதிய கம்பிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்