பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே பொது இடங்களில் அமர்ந்து மதுப்பிரியர்கள் இரவு, பகலாக மது அருந்தி வருகின்றனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பெண்கள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மது அருந்தும் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால், ஒரு சில பாட்டில்கள் உடைந்து பொதுமக்களின் கால்களில் பட்டு காயம் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.