ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2025-09-07 13:45 GMT

பெரம்பலூர் அருகே உள்ள வடக்குமாதவி கிராமத்தில் பொதுமக்களின் நலனுக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதலமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதலமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்