பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2025-09-07 13:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் அண்ணா நகர் படித்துறை அருகே டாக்டர் அம்பேத்கர் சிலை பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பெரம்பலூர் உள்பட பல ஊர்களுக்கு பள்ளி , கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பஸ் ஏறி சென்று வருகின்றனர். இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பயணிகள் பலரும் கடும் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்துநிற்கின்றனர். இதனால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்