கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் சாலையோர வாறுகாலில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் அதிகமாக செல்லும்போது சாலையிலும் ஏறி விடுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் அடிக்கடி வாகன விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே வாறுகால் உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.