பட்டுக்கோட்டை பகுதி மேலத்தெருவில் நாய்கள் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. இவை சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.