திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் பெரிய காலிமனை பராமரிப்பு இன்றி கொடிய விஷம் கொண்ட பாம்புகள், வண்டுகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உறைவிடமாக உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இவ்வழியாக செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.