புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் ஊராட்சி இச்சடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தை அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டிடம் பழுதடைந்துள்ள நிலையில், மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.