புதுக்கோட்டை டவுன் மேல மூன்றாம் வீதி மீன் மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், உடல்களில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாகி வருவதுடன், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.