பெரம்பலூர் கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் ஆண்களுக்கென சிறுநீர் கழிக்கும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறுநீர் கழிக்கும் இடம் முறையாக பராமரிக்கப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியில் பெண்களுக்கு என தனி சுகாதார வளாகம் அமைக்கப்படாமல் உள்ளதால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக பொது சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.