பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமம், அண்ணா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஓர் உயர் கோபுர மின்விளக்கு சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. கடந்த பல நாட்களாகவே இந்த உயர் கோபுர மின்விளக்கு சரிவர எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மாரியம்மன் கோவில் வளாகப்பகுதி இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.