கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்கூடலூர் வனத்துறை சோதனைச்சாவடி அருகே இ-பாஸ் சோதனை மையம் செயல்பட்டு வருகிறது. வாகன தணிக்கையின்போது ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி வரும் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் கட்டுப்பாட்டு இழந்து இ-பாஸ் சோதனை செய்யும் இடத்தில் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.