சித்தோடு பவானி சாலையில் உள்ள ராயபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மது பிரியர்கள் மது குடித்துவிட்டு படுத்து கிடக்கிறார்கள். இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்ல மாணவ-மாணவிகள் அச்சப்படுகின்றனர். அருகிலேயே தான் பஸ் நிலையமும் உள்ளது. இங்கும் பயணிகள் அச்சத்துடன் வரும் நிலை உள்ளது. எனவே மதுபிரியர்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.