மரக்காணம் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள், பாசன வாய்க்கால்கள் தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் தண்ணீரானது கடைமடை பகுதி வரை செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஏரி, குளம் மற்றும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.