புதுக்கோட்டை மாவட்டம் பழைய ஆதனக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆதனக்கோட்டையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று வருகின்றர். புதுக்கோட்டையிலிருந்து பழைய ஆதனக்கோட்டை வழியாக கந்தர்வக்கோட்டைக்கு 3 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே ப்ஸ இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணிகள், நோயளிகள், மாணவர்கள் 3 கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.