‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-24 13:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா அன்னவாசல் அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதம் அடைந்தும், போதிய இருக்கைகள் இன்றியும் உள்ளதால் பெண்கள், முதியவர்கள், கர்பிணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையில் பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்