ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?

Update: 2025-08-24 13:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள சூரப்பட்டியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் மேலத்தானியம் கூட்டுறவு சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்தக் ரேஷன் கடையில் சூரப்பட்டி, வடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சூரப்பட்டியில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு அரசு கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்