புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இருந்து மாங்காடு சுந்தர் குடியிருப்பு மற்றும் விடங்கர் கோவில் செல்லும் வழியில் உயரழுத்த மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது மின் கசிவு ஏற்பட்டு ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை ஆய்வு செய்து செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.