தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 13:01 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதியில் ஏராளமான திருமண மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் துன்புறுத்தி வருகின்றன. எனவே அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்