பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்கனவே கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பிரசவம் பார்ப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் பிரசவம் பார்க்க வெளியூர் செல்ல வேண்டி உள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.