சாய்ந்த நிலையில் மின்கம்பம்

Update: 2025-08-24 11:02 GMT

பட்டுக்கோட்டை டவுன் மணிக்கூண்டு அருகே ஆஸ்பத்திரி தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருக்கிறது. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்