திண்டுக்கல் மேட்டுப்பட்டி புஸ்பவனம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பாதசாரிகள் முதல் வாகனங்களில் செல்பவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து அகற்ற வேண்டும்.