புஞ்சைபுளியம்பட்டி எரங்காட்டுபாளையம் அருகே கோட்டபாளையத்தில் உள்ள ஓடை பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஓடை தூர்வாரப்படாததால் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை வெள்ளம், வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் ஓடையின் மேல் உள்ள பாலத்தின் மீது ஆறு போல் ஓடி வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?