சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டுக்குட்பட்ட ஜல்லியூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக கழிப்பறை, குளியலறை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் சரியாக பராமரிக்கப்படவில்லை. சுவரில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. கான்கிரீட் காரைகள் பெயர்ந்து விழுந்து பொதுமக்களுக்கு காயங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி கழிவறை மற்றும் குளியலறையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.