பெண்கள் அச்சம்

Update: 2025-08-17 12:11 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலைய வளாகத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பும், பஸ் நிலைய வளாகப்பகுதியிலும் மது அருந்துவதினால் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை உள்ளது. சிலர் மதுபோதையில் தகாத வார்த்தைகளில் பேசுவதால் பெண்கள் முகம் சுழிப்பதுடன், பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்