ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் படுத்து கொள்கின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?