குளம் தூர்வாரப்படுமா?

Update: 2025-08-17 11:16 GMT

ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமத்தில் ஆவக்குடி குளம் உள்ளது. இந்த குளம் பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. குளம் முழுவதும் விஷப்பூச்சிகள் சுற்றித்திரிகின்றன. புதர்மண்டி கிடப்பதால் குளத்தில் நீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை துர்வாரி குளத்தில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்