இரணியலில் இருந்து கருங்கல் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் திங்கள்சந்தையில் இருந்து கருங்கல் வரை உள்ள சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த நாய்கள் கூட்டமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கின்றன. இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் அச்சத்துடனேயே அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.