அய்யலூர் அருகே மணியக்காரன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.