பண்ருட்டி மேலப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.